நோக்கு

பொருளாதார மற்றும் சமூக ரீதியில் திருப்தி மிக்கதோர் ஓய்வூதியர் சமுதாயம்

செயற்பணி

அரச சேவையில் ஓய்வூதியர்களுக்கும் அவர்களின் பயனாளிகளுக்கும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் நிலைபேறான முகாமைத்துவ முறைகளைப் பயன்படுத்தி, தனியார் மற்றும் அரச துறையினர் உள்ளடங்கிய சேவைபெறுநர்களினதும் சேவை வழங்குநர்களினதும் திருப்தியை உயர் மட்டத்தில் உறுதிப்படுத்தி, சட்ட ரீதியான நலன்களை வழங்குதல்.

குறிக்கோள்கள்

  • ஓய்வுபெற்ற அரச அலுவலர்களுக்கும் அவர்களைச் சார்ந்துள்ள அவர்களது குடும்பத்தினருக்கும் சிறந்த பாதுகாப்பு வலையமைப்பை வழங்குவதற்கு
  • வாழ்நாள் முழுமைக்குமான ஒதுக்கீடு
  • விதவைகள் மற்றும் தபுதாரர்கள்
  • மாற்றுத் திறனாளிகள்
  • தலைமுறைகளுக்கிடையேயான ஒதுக்கீடு
  • அரசாங்க ஊழியர்களின் விருப்பங்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கு
  • சேவை ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்கு

இலக்குகள்

  • ஓய்வூதிய பிரமாணக் குறிப்பு மற்றும் வி.அ. ஓய்வூதிய சட்டத்திற்கு இணங்க அரச ஊழியர்களின் ஓய்வூதிய நலன்களை வழங்குவதுடன் பொருத்தமான ஏற்பாடுகளை அமுல்படுதும் செயல்முறைகளைக் கண்காணிப்பதற்கு
  • ஓய்வூதியம் தொடர்பிலான சட்ட வரையறை, விதிகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் கொள்கை முடிவுகளிற்கமைய ஓய்வு பெறும் அரச அலுவலர்களுக்கு ஓய்வூதிய் கொடுப்பனவு வழங்குதற்கு
  • மாதாந்தம் தடங்கலற்ற ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் ஓரு முறை வழங்கப்படும் நன்மைகள் அனைவருக்கும் திருத்தமாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்கு
  • பொது சேவைகள் நம்பிக்கை நிதியம் மற்றும் வழங்கப்படும் நன்மைகளைக் கண்காணிக்க
  • அரச சார்பிலும் அதன் நிர்வாகம் சார்பிலும் அரசிற்கான வருவாய்கள் மற்றும் வி.அ. ஓய்வூதியப் பங்களிப்புகளை சேகரிக்க
  • ஓய்வூதியத்தை தயாரிக்கும் ஓய்வூதியக் கொடுப்பனவு வலையமைப்புடன் தொடர்புடைய அலகுகள் மற்றும் வங்கிகளுடன் திறன் மிக்க இணைப்பை முகாமை செய்ய
  • சமூக பாதுகாப்பு குறித்த உலகளாவிய போக்குகளை கற்கும் அதே நேரத்தில் நவீன சமூகப் பாதுகாப்பு தொகுதியின் மீது கொள்கைகளை உருவாக்க உதவுவதற்கு
  • வருடாந்தப் வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதன் மீதும் அதன் முன்னேற்றத்தின் மீதும் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் பொறுப்பை உறுதிசெய்வதற்கு
  • ஓய்வூதிய சமுதாயத்தின் சமூகப் பொருளாதார நலன்களை உறுதிப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை இனங்காணவும் அவற்றை அமுல்படுத்தவும் தனியார் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்பை பெறுவதற்கு
  • ஓய்வூதியதாரர்களின் சங்கங்களை மையமாக கொண்ட சிவில் சமூகத்தை உருவாக்குவதன் மூலம் பிரதேச அபிவிருத்தி செயற்பாடுகளில் பயனுறு பங்காளிகளாக்குவதற்கு
  • தலைமுறைகளிற்கிடையேயான உறவை நவீனமாக கட்டியெழுப்புவதற்கு

மதிப்பு அறிக்கை

உள்ளக மற்றும் வெளிப்புற பெறுனர்கள் மற்றும் பங்களிப்பாளர்களின் தொழில் திறன் அறிவை மதிக்கும் அதேவேளை ஓய்வூதியம் பெறும் சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார திருப்திக்கு உறுதி அளிப்பதற்காக கைகொடுத்தல், தங்கள் திறமைகளை நம்புவதன் மூலம், தொழிற்துறையில் தங்கள் நேர்மைக்கு பிரதான இடம் அளித்து, நடைமுறைகள் மற்றும் தரங்களை நிறுவுதல், நிதி செயல்களில் துல்லியம் உறுதி தேவையான கண்டுபிடிப்புகள் அறிமுகம், முகாமைத்துவ செயல்முறைகள் மற்றும் முடிவுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் தண்ணீர், மின்சாரம் மற்றும் பௌதீக மற்றும் உயிரியல் வளங்களின் நிலையான பயன்பாட்டிற்கு ஊக்குவித்தல்.