pic 1
  2016.12.31 ஆம் திகதி வரை ஓய்வு பெற்ற ஆயுதப்படையினர் மற்றும் அவர்களின் விதவைகள் மற்றும் அனாதைகளின் ஓய்வூதியம் பெறுவோர் அடங்கலாக அனைத்து அரசு அலுவலர்களதும் ஓய்வூதியம் 2019 வரவு செலவு திட்டத்தின் படி 2017 அரசாங்க சம்பள கட்டமைப்பிற்கு இணையாகத் தீவின் அனைத்துப் பிரதேச செயலகங்களினூடாகவும் வெற்றிகரமாக மீளாய்வு செய்யப்பட்டதுடன் மீளாய்வில் சிக்கல்கள்களைக் கொண்ட ஓய்வூதியக் கோப்புகளைப் ஆய்வு செய்வதன் மூலம் தீர்வுகளை வழங்குதல் தொடர்பில் ஓய்வூதியத் திணைக்களத்தால் ஒரு நிகழ்ச்சித் திட்டம் நடாத்தப்படுகிறது.

இந்த ஓய்வூதிய மீளாய்வுச் செயல்முறையை மிகவும் செயற்றிறனுடனும் வினைத்திறனுடனும் செயற்படுத்தும் நோக்கில் புதிய தகவல்த் தொழில்நுட்ப மென்பொருளை ஓய்வூதியத் திணைக்களம் அறிமுகப்படுத்தியதுடன் ஓய்வூதியக் கோவைகளில் உள்ள குறைபாடுகளின் விளைவாக தரவுத் தளத்திற்குள் தரவை துல்லியமாக உள்ளிட இயலாமையால் தோன்றும் பிரச்சினைகளும் இனங்காணப்பட்டன. அதற்கமைய, கொள்கைகள் மற்றும் சட்ட சூழ்நிலைகள் மீது தீவிர கவனம் செலுத்தி தீர்வுகள் வழங்கப்படுகின்றன.

இந்த திட்டத்தின் ஆரம்ப அமர்வு மார்கழி மாதம் 16 ஆம் திகதி ஓய்வூதியத் திணைக்களக் கேட்போர் கூடத்தில் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் எட்வர்ட் பெரேரா மற்றும் ஓய்வூதிய பணிப்பாளர் புத்திகா அமல் ஜெயதிஸ்ஸ ஆகியோரின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது. மேலும் இந்த திட்டம் பல கட்டங்களில் தீவின் அனைத்து பிரதேச செயலகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி நடாத்தப்படும்.