இலங்கை பிரித்தானிய காலணித்துவத்தின் கீழ் இருந்த காலகட்டத்தின் போது 1815 ஆம் ஆண்டில் ஓய்வூதிய, விதவைகள் கொடுப்பவு மற்றும் அநாதைகள் ஓய்வூதியக் கொடுப்பனவு வரலாறு ஆரம்பித்தது. பிரித்தானியப் பேரரசின் காலணித்துவத்தில் சேவைபுரிந்த அலுவலர்கள் மாதாந்த ஓய்வூதிய உரித்துடையவர்கள் ஆனதுடன் அவர்களது சம்பள மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு காலணித்துவ செயலாளர் பொறுப்புடையவராக விளங்கினார். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே ஓய்வூதியக் கொடுப்பனவு பற்றிய அடிப்படை அறிக்கைகள் காணப்படுகின்றன. இருந்த போதும் 1901 ஆம் ஆண்டில் இருந்து இந்நாட்டின் சட்டத்தின் ஓரு பகுதியாக 1947 இன் 02 ஆம் இலக்கக் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 02 இன் மூலம் ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

1947 ஆம் ஆண்டின் ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பு வரைவு பலவேறு திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 1972 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதிய ஓய்வூதியப் பிரமாணக் குறிப்பின் உறுப்புரைகள் தற்போது அமுல்படுத்தப்படுகிறது. காணப்படும் வரலாற்றைப் பறைசாற்றும் ஆதாரங்களின் பிரகாரம், 2,155,792.10 ரூபா 1920 ஆம் ஆண்டின் ஓய்வூதியச் செலவீனமாகும். அவ்வாறே அதே ஆண்டில் மொத்த செலவீனத்தில் 20,889,613.38 ரூபா அடிப்படைச் சம்பளச் செலவீனமாகும். மேலும் அதேயாண்டின் மொத்த ஓய்வூதியர்களின் எண்ணிக்கை 1200. மொத்த ஓய்வூதியச் செலவீனத்தில் 1,249,833.29 ரூபா உள்நாட்டு அலுவலர்களுக்கும் 905,958.87 ரூபா முடிக்குரிய முகவர்கள் மூலம் நியமனம் பெற்ற வெளிநாட்டு அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கணிசமான அரச சேவைக்காகவும் செலவிடப்பட்டது. 1898 இன் 01 ஆம் இலக்கக் விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியக் கட்டளைச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியம் 1906 ஆம் ஆண்டு வரை விதவைகள் மற்றும் அநாதைகள் நிதியமாக அமுல்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், 1906 ஆம் ஆண்டில் நிதியம் இல்லாதொழிக்கப்படதுடன் ஓர் ஓய்வூதியத் திட்டமாக மாற்றம் பெற்றது. அதற்கமைய மீட்டெடுக்கப்படும் அனைத்து பங்களிப்புக்களும் அரசின் திரட்டு நிதியத்திற்கு வரவு வைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியக் கொடுப்பனவு அரசாங்கத்திற்கு ஓரு சுமையாக மாற்றம் பெற்றது.

அரச சேவையில் இணைந்து கொள்ளும் ஓய்வூதிய உரித்துடைய நியமனம் பெற்ற அனைத்து அரச அலுவலர்களும் விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பை கட்டாயமாகச் செலுத்த வேண்டும் என்பதுடன் அனைத்து பெண் அரச அலுவலர்களும் விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பை 1983.08.01 ஆம் திகதியில் இருந்து கட்டாயமாக செலுத்த வேண்டும். 1898.06.23 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வந்த விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியக் கட்டளைச் சட்டத்தில் காலத்திற்குக் காலம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 2010 இன் 08 ஆம் இலக்க திருத்தச் சட்டமாக தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஓய்வூதிய திட்டத்தின் வரலாறு காலத்தின் தேவைக்கேற்ப தேவையான மாற்றங்களுடன் இற்றைப்படுத்தப்பட்டு வருவதுடன் அதேவேளை வெவ்வேறு வழிகளில் இச் செயற்பாட்டிற்குப் பொறுப்பான நிறுவனமும் நிறுவன கட்டமைப்புக்களும் இற்றைப்படுத்தப்படுகின்றன. காலணித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரத்தை வென்றடைந்த பின்னர் அரச துறைகளில் கடமையாற்றும் அரச அலுவலர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்கும் பொறுப்பு பொதுத் திறைசேரியின் உதவிக் கட்டுப்பாட்டாளரிடம் வழங்கப்பட்டது. எவ்வாறாயினும் 1970 இல் பொது நிர்வாக அமைச்சு உருவாக்கம் பெற்றதுடன் 1970.12.23 ம் திகதி அ தர நிறுவனமாக ஓய்வூதியத் திணைக்களமும் உருவாக்கப்பட்டது. ஓய்வூதியத் திணைக்களத்தின் உருவாக்கத்துடன் அரச அலுவலர்களுக்கான ஓய்வூதிய வழங்கல் செயல்முறைக்கு மேலதிகமாக விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத் திட்ம் மற்றும் பொதுச் சேவை நம்பிக்கை நிதியம் ஆகியவையும் திணைக்களத்தின் நோக்கின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அது வரை காலமும் விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியத் திட்டம் நிதி அமைச்சின் கீழ் ஓரு துணை திணைக்களமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது (விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய அலுவலகம்). 1942 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பொதுச் சேவைகள் நம்பிக்கை நிதியம் திறைசேரியின் பிரதிச் செயலாளரது பங்களிப்புடன் இயக்கப்பட்டது. இருப்பினும் ஓய்வூதியத் திணைக்களம் அரச துறையின் சமூக காப்பீடான இம் மூன்று துறைகளிற்கும் முன்னுரிமை வழங்கி அவற்றை ஒன்று சேர்த்ததுடன், திணைக்களம் பொதுத் திறைசேரியில் அமைந்திருந்து. பின்னர் பல பிரிவுகள் கொழும்பின் பல பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வந்தன. அதற்கமைவாக ஒரு பிரிவு கொழும்பு செயலகக் கட்டத்தின் முதலாம் மாடியில் செயற்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை தலைமைச் செயலகத்துடன் பல பிரிவுகளும் அக்கட்டத்தின் இரண்டாம் மாடியில் தொழிற்பட்டுவந்தது. விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியக் காரியாலயம் அக்கட்டடத்தின் சுற்றயல் பகுதியிலும் செயற்பட்டுவந்தது. அதேவேளை, பொதுச் சேவை நம்பிக்கை நிதிய அலுவலகம் பம்பலபிட்டியவில் ஒரு கட்டடத்தில் செயற்பட்டு வந்தது. ஆசிரியர்களுக்கான விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியக் காரியாலயம் மாளிகாவத்தை தலைமைச் செயலகக் கட்டடத்தில் நிர்வகிக்கப்பட்டது. இந் நிறுவனம் சிதறிக்காணப்படுவதால் திணைக்களத்திலிருந்து சேவையைப் பெற்றுக் கொள்ளும் பயனாளிகள் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்தில் கொண்டதுடன் மேலும் நிர்வாகச் சிக்கல்களையும் கருத்தில் கொண்டு 1980.08.10 ஆம் திகதி இலக்கம் 10, என்.எச்.காதர் மாவத்தை, புறக் கோட்டை, கொழும்பில் அமைந்துள்ள கப்ரிகன் கோபுரக் கட்டத்தில் ஓய்வூதியத் திணைக்களம் அமைக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதன் பிற்பாடு ஓய்வூதியத் திணைக்களம் மாளிகாவத்தையில் அமைந்துள்ள செயலகக் கட்டடத்தில் நிறுவப்பட்டது. ஓய்வூதியத் திணைக்களம் ஐந்து மாடிகளைக் கொண்ட அதே கட்டத்தில் இன்று வரை சேவைகளைச் செவ்வனே செய்து வருகிறது.

நிறுவனக் கட்டமைப்பு வரலாற்றை பின்னோக்கிப் பார்க்கையில், திரு. லேனார்ட் பன்னம்பலம ஓய்வூதியத் திணைக்களத்தின் முதல் பணிப்பாளராக சேவையாற்றினார், இவர் ஓய்வூதியத் திணைக்களம் பொது நிர்வாக அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் தாபனப் பிரிவின் மேலதிக கட்டுப்பாட்டாளராக கடமையாற்றினார். அக்கால கட்டத்தில் மொத்த ஆளணி 200 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாளணி இலங்கை நிர்வாக சேவை, இலங்கை கணக்காளர் சேவை மற்றும் ஏனைய இணைந்த சேவைகள் அலுவலர்களைக் கொண்டிருந்தது. எவ்வாறாயினும் திணைக்களத்தின் விரிவாக்கத்துடன் 2005 ஆம் ஆண்டில் 340 ஓய்வூதிய அலுவலர்கள் மற்றும் 141 ஆவணப் உதவியாளர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டதுடன் அதற்கமைய திணைக்களத்திற்கேயான திணைக்கள ஆளணி உருவாக்கப்பட்டது. மேலும் திணைக்கள அதிகாரம் முதலில் மாவட்டச் செயலகங்களிற்கும் அதனையடுத்து பிரதேச செயலகங்களிற்கும் பரவலாக்கப்பட்டது. பொது நிர்வாக அமைச்சின் கீழ் இத் திணைக்களம் கொண்டுவரப்பட்ட போது கீழ்வரும் அலுவலர்கள் திணைக்களத் தலைவர்களாகக் கடமையாற்றினர்.

ஓய்வூதியப் பணிப்பாளர்

ஆண்டு பெயர்
1971 - 1975 திரு. லேனார்ட் பன்னம்பலம
1976 - 1979 திரு. ஷியாமன் ஜயசிங்க
1979 - 1986 திரு. டொனால்ட் அபேசிங்க
1987 - 1989 திரு. எஸ். சிவானந்தன்
1990 - 1991 திரு. ஒஸ்ரின் ஜயவர்தன
1991 - 1995 திரு. ஆர்.டபிள்யு. பியசேன
1995 - 1997 திரு. அரிய சமரவீர
1997 - 2001 திருமதி. பி.எம்.பி. ஜயவர்தன
2001 - 2002 திரு. எஸ்.டபிள்யு. ராஜபக்ஸ
2002 - 2004 திரு. விக்ரர் சமரவீர
2004 - 2012 திரு. கே.ஏ. திலகரட்ண
2012 - 2012 திருமதி. என். அபேவிக்ரம
2012 - 2013 திரு. டி. ஸ்வர்ணபால
2013 - 2016 திரு. எஸ்.எஸ். ஹெட்டியாராச்சி
2016 இலிருந்து இன்றுவரை திரு. ஏ. ஜகத் டி டயஸ்