pic 1
  14/2019 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கமைய, நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களும் தற்போது ஓய்வூதிய மறுசீரமைப்புச் செயல்முறயை செய்து வருவதுடன் கொழும்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட ஓய்வூதிய திருத்தம் தொடர்பிலான தற்போதைய முன்னேற்றம் பற்றி விவாதிக்கும் பொருட்டு கொழும்பு மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் சேவையாற்றும் கணக்காளர்களுக்காகத் திணைக்களத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் 2016.08.01 ஆம் திகதி திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

31.12.2016 க்கு முன்னர் ஓய்வு பெற்ற அரச அலுவலர்கள், முப்படையினர் மற்றும் அவர்களது விதவைகள் அநாதைகளுக்கான ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கான ஓய்வூதியத் திருத்தம் 14/2019 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னரும், சுற்றறிக்கை வெளியிடப்பட்ட பின்னரும் பல கட்டங்களாக கொழும்பு மாவட்டத்தில் ஓய்வூதியத் திருத்தத்துடன் தொடர்புபட்டுப் பணிபுரியும் கணக்காளர்கள் மற்றும் ஓய்வூதிய அலுவலர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான பயிற்ச்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன.

ஓய்வூதிய திருத்தத்தின் செயற்திறனை மேம்படுத்தி ஓய்வூதியர்களுக்குக் கிடைக்கப்பெறும் நன்மைகளை துரிதமாக்கும் நொக்கத்துடன், சம்பள மறுசீரமைப்பு செயல்முறைக்கு வடிவமைக்கப்பட்ட திணைக்களத்தின் த.தொ மென்பொருளை எவ்வாறு இயக்குவது என்பது குறித்து அலுவலர்களுக்கு திணைக்களத்தால் மீண்டும் பயிற்சி அளிக்கப்பட்டதுடன் சம்பள மாற்றத்தின் போது மென்பொருளுடன் ஏற்பட்ட சிக்கல்களுக்கும் தீர்வுகளும் வழங்கப்பட்டன.

கொழும்பு மாவட்டத்தின் ஓய்வூதிய திருத்தத்த முன்னேற்ற நிலையை மேல் மாகாணத்தின் பிற மாவட்டங்களுடன் ஒப்பிட்டு மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து ஓய்வூதியர்களுக்கும் துரிதமாக அவர்களுக்கான நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக பொருத்தமான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள அலுவலர்களுக்கு கே.ஆர்.பத்மப்பிரிய, மேலதிய ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் அவர்களால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் .

கே.ஆர்.பத்மப்பிரிய, மேலதிய ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம், பிரதம கணக்காளர் ஏ.டி.ரி.என்.அபயசிங்க, பணிப்பாளர் (நிர்வாகம்) கே.ஆர்.ஏ.தர்மசேன மற்றும் உதவிப்பணிப்பாளர் (தகவல்தொழில்நுட்பம் மற்றும் கொள்கை) புத்திக அமல் ஜயதிஸ்ஸ ஆகியோருடன் கொழும்பு மாவட்டச் செயலகப் பிரதம கணக்காளர் ஜி.ஜயவீர மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள் மற்றும் ஓய்வூதிய அலுவலர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.