pic 1

 

 

 


  

 

 

 

 

ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் ஓய்வூதியர்களால் பூரணப்படுத்தி சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஓய்வூதிய வாழ்க்கைச் சான்றிதழுடன்  சம்பள விபரம் அடங்கிய ஆவணங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

 

அதற்கமைய,  கிராம சேவகர் ஊடாக பொருத்தமான  ஆவணங்கள் ஓய்வு பெற்ற அலுவலர்களுக்குத் தபால் மூலம் பிரதேச செயலகங்களால் விநியோகிக்கப்படும். அத்துடன் எவ்வித கட்டணமும் இன்றி வாழ்க்கைச் சான்றிதழை ஓய்வூதிய திணைக்களத்தின் அலுவலக இணைய முகவரி  www.pensions.gov.lk ஊடாகவோ அல்லது தங்கள் பிரிவிற்குரிய பிரதேச செயலகங்களினூடாகவோ பெற்றுக் கொள்ள முடியும். வாழ்க்கைச் சான்றிதழ்களைப் பெறும்போது வெளிப்புறக் தலையீடோ அல்லது பணம் செலுத்த வேண்டிய அவசியமோ இல்லை என்பதை ஓய்வூதியத் திணைக்களம் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வலியுறுத்திக் கூறுகிறது. பூரணமாக நிரப்பப்பட்ட வாழ்க்கைச் சான்றிதழ் கிராம சேவகரால் சான்றளிக்கப்பட்டு 2020.03.31 ஆம் திகதிக்கு முன்பதாக உங்கள் பிரதேச செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதுடன் அத்திகதிக்கு முன் தங்கள் வாழ்க்கை சான்றிதழ்களை சமர்ப்பிக்காத ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் 2020 மே மாதம் முதல் நிறுத்திவைக்கப்படும் என ஓய்வூதியப்பணிப்பாளரின் 2019.12.06 ஆம் திகதிய  ஓய்வு/ மா.செ / வா.சா/ 2020  ஆம் இலக்க  கடிதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பிரதேச செயலகம் அல்லது மாவட்ட செயலகத்தின் ஓய்வூதிய பிரிவில் இருந்து மேலதிக தகவல்களை நேரடியாக பெற்றுக்கொள்ளமுடியும்.